நாட்டில் 40.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 12,50,80,488 இரண்டாம் தவணை - 49,07,782 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 9,76,43,768 இரண்டாம் தவணை - 2,93,47,090 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,21,55,133 இரண்டாம் தவணை - 3,13,63,647 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,69,922 இரண்டாம் தவணை - 75,52,270 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,77,95,125 இரண்டாம் தவணை - 1,03,66,268 |
| மொத்தம் | 40,64,81,493 |