முகப்பு
இந்தியா

உ.பி.யில் இரண்டு பேருந்துகள் மோதல்: 7 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே 2 பேருந்துகள் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சம்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிலர் பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த பேருந்து சண்டவுசி அருகே பழுதானது. 
இந்த நிலையில் பழுதான பேருந்தின் டயரை மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு பேருந்து நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →