பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கு விரிவான திட்டம்: மத்திய அரசு
நாட்டில் சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ஏ. நாராயணசாமி கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு எனும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரிவான மறுவாழ்வை வழங்குவதற்கான மாதிரி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.