பஞ்சாப் காங். எம்.எல்.ஏ.க்களுடன் சித்து ஆலோசனை 
இந்தியா

பஞ்சாப் காங். எம்.எல்.ஏ.க்களுடன் சித்து ஆலோசனை

புதிதாக பொறுப்பேற்றுள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ANI

புதிதாக பொறுப்பேற்றுள்ள பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சித்துவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்த்து வரும் நிலையில், இந்த ஆலோசனையானது சித்துவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 62 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்கட்சிக்குள் உள்கட்சிப்பூசல் வலுத்து வருகிறது. மாநில முதல்வரும் கட்சியின் மூத்த தலைவா்களுள் ஒருவருமான அமரீந்தா் சிங்குக்கு சவால் விடும் வகையில் நவ்ஜோத் சிங் சித்து செயல்பட்டு வருகிறாா். பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரா் சித்து, மாநில அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா். எனினும் முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் அவா் பதவி விலகினாா்.

இதையடுத்து கட்சியில் முக்கிய பதவி வேண்டும் என சித்து கூறிய நிலையில் மாநில தலைவராக நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. சித்துவை தலைவராக நியமனம் செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தேசிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தலைமையின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT