முகப்பு
இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய 60.92 லட்சம் பேர்: மத்திய அரசு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 60.92 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2021 at 4:08 PM
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நாடு திரும்பிய 60.92 லட்சம் பேர்: மத்திய அரசு
பகிர்:

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 60.92 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலின் போது பல்வேறு நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனைக் களையும் விதமாக மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 6,92,264 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தது.

Advertisement

மேலும் 3570 இந்தியர்கள் கரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பலியாகியுள்ளதாகவும் மத்திய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.