முகப்பு
இந்தியா

அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த திரிணமூல் எம்பி: கூட்டத்தொடரில் பங்கேற்க தடை

மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை கிழித்த திரிணமூல் எம்.பி. சாந்தனு செனை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
வெங்கையா நாயுடு
பகிர்:

மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை கிழித்த திரிணமூல் எம்.பி. சாந்தனு செனை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவை இன்று தொடங்கியவுடன் வெங்கையா நாயுடு பேசியதாவது,

அவையில் நடந்த இந்த செயலால் நான் மிகவும் வேதனையுற்றேன். அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்தது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக கருதப்படுகிறது. மேலும், கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்ற அவை விவகாரத்தில் சாந்தனு சென் பங்கேற்க தடை விதித்து சஸ்பெண்ட் செய்வதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பேச முன்வந்தார்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சரிடமிருந்த அறிக்கையைப் பிடுங்கி கிழித்தெறிந்தார்.

இதனால், அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →