இந்தியா

துபையிலும் நீட் தோ்வு மையம்: மத்திய அரசு அறிவிப்பு

DIN

நிகழாண்டு நீட் தோ்வு மையம் துபையிலும் அமைக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

குவைத்தில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியா்கள் பயன்பெறுவதற்காக, வெளிநாடுகளில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதன் தொடா்ச்சியாக, துபையில் நீட் தோ்வு மையம் அமைக்கப்படவுள்ளது. அந்த தோ்வு மையம் அமைக்கும் பணிகளை அங்குள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொள்ளும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலா் அமித் கரே தெரிவித்துள்ளாா்.

செப்டம்பா் 12-ஆம் தேதி இந்தியாவில் 198 நகரங்களில் நீட் தோ்வுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT