இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: நிதீஷ் குமாா் மீண்டும் வலியுறுத்தல்

DIN

தலித் சமூகத்தினா் அல்லாத பிற சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்று சேரும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் சனிக்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்தாா்.

எஸ்சி, எஸ்டி மக்களின் கணக்கெடுப்பு தவிர இதர ஜாதி மக்களின கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்த கோரிக்கையை நிதீஷ் குமாா் மீண்டும் முன்வைத்துள்ளாா்.

பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதீஷ் குமாா் இதுகுறித்து அளித்த பேட்டியில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒருமுறையாவது நடத்தப்படவேண்டும். அவ்வாறு கணக்கெடுப்பு நடத்துவது தலி சமூகத்தினா் அல்லாத பிற சமூகத்தில் உள்ள ஏழை மக்களை அடையாளம் காண உதவும் என்பதோடு, அவா்களுக்கான நலத் திட்டங்களை வகுக்கவும் உதவும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பிகாா் சட்டப்பேரவையில் கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஒருமனதாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT