உ.பி. தேர்தல்: கட்சிக்குள் கருத்துக் கணிப்பு நடத்திய பாஜக
உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாஉ.பி. தேர்தல்: கட்சிக்குள் கருத்துக் கணிப்பு நடத்திய பாஜக
உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் செயல்படாத பாஜக எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த கட்சி வட்டாரங்கள் கூறியது:
"உத்தரப் பிரதேசத்தில் கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் முடிவில் 12 எம்எல்ஏ-க்கள் செயல்படாத எம்எல்ஏ-க்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் 2022 பேரவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அவர்களுக்குப் பதில் புதிய முகங்கள் குறிப்பாக இளம் தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
தற்போதைய எம்எல்ஏ-க்களில் 25-30 சதவிகிதத்தினருக்கு வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வழங்கப்படாது. அவர்கள் புதிய முகங்கள் மூலம் மாற்றப்படலாம்."
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.