இந்தியா

சிஆர்பிஎஃப் உருவான நாள்: மோடி வாழ்த்து

DIN

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“துணிவு மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். மத்திய ரிசர்வ் காவல் படையானது, வீரத்திற்கும், தொழில்திறனுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎஃப் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் ஒற்றுமைக்காக அவர்கள் ஆற்றும் பணியும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.

கடந்த 1939ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மத்திய ரிசர்வ் காவல் படை அமைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுத படைகளில் அதிக வீரர்களை கொண்ட படை சிஆர்பிஎஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT