முகப்பு
இந்தியா

பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பெயர் பரிந்துரை: தில்லி முதல்வர்

​பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பெயர்களை பரிந்துரைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
கோப்புப்படம்
பகிர்:


பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பெயர்களை பரிந்துரைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:

"இந்தாண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது. நாம் நன்றியுடைவர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களை கௌரவிக்க வேண்டும்.

இதற்கானப் பெயர்களை மக்கள் எங்களிடம் தெரிவிப்பார்கள். ஆகஸ்ட் 15-க்குள் padmaawards.delhi@gmail.com என்ற மெயிலுக்கு பெயர்களை அனுப்பலாம். கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளோம். ஆகஸ்ட் 15-இல் இருந்து 15 நாள்களில் மக்கள் பரிந்துரைத்த பெயர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை கண்காணிப்புக் குழு அரசிடம் பரிந்துரைக்கும். அதன்பிறகு இறுதிப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்."

முழு கட்டுரையைப் படிக்க →