இந்தியா

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் சந்திப்பு

தினமணி

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலாசாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக தில்லி வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க முயற்சி செய்தனர். கர்நாடக மாநில முதல்வர் விவகாரம், அஸ்ஸôம் - மிúஸôரம் மாநிலங்கள் எல்லைத் தகராறு உள்ளிட்ட விஷயங்களில் அமித் ஷா தீவிரமாக இருந்ததால் அதிமுக தலைவர்களது சந்திப்பு திங்கள்கிழமை நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணிக்கு உள்துறை அமைச்சருடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் நவநீதகிருஷணன், மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகரன், மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமார், தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, வேலுமணி ஆகியோர் உள்துறை அமைச்சருடன் தனியாக சுமார் 15 நிமிஷங்கள் பேசினர். சுமார் 11.40 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர், பகல் 12 மணிக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியை தில்லி அசோகா சாலையில் உள்ள அவரது வீட்டில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர். உள்துறை இணையமைச்சராக இருந்த கிஷண் ரெட்டி சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது கேபினட் அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கிஷண் ரெட்டி முக்கியப் பங்கெடுத்ததால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், தமிழ்நாடு பவன் திரும்பியதும் "மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சரை சந்தித்தோம். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னை வழியாக மதுரைக்கும், எடப்பாடி பழனிசாமி பெங்களூரு வழியாக சேலத்துக்கும் விமானத்தில் புறப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT