முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு!

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரைக் காணவில்லை. மொத்தமாக 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 25,581 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 2,29,074 போ் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →