மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டம் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரஹலாத் ஜோஷி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு பாஜகவின் நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இரண்டாவது முறையாக கூடியுள்ளது.