முகப்பு
இந்தியா

பெகாஸஸ் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும்: மம்தா

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:


பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது.

பிரதமருடனான இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. சந்திப்பின்போது கரோனா மற்றும் மாநிலங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து எழுப்பினேன். 

மேலும் நிலுவையில் உள்ள மாநிலத்தின் பெயர் மாற்ற விவகாரம் குறித்தும் எழுப்பினேன். இதற்கு பார்க்கலாம் என்று பதிலளித்தார்" என்றார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை. பிரதமருடனான சந்திப்புக்கு முன்பு மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →