முகப்பு
இந்தியா

நாளை(ஜூலை 28) மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டம் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மசோதா மற்றும் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

மேலும், பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.