உத்தரப்பிரதேசம்: பாரபங்கி அருகே பேருந்து மீது லாரி மோதி 18 பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலை பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதி பகுதியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து ஒன்று பழுது ஏற்பட்டதை அடுத்து சாலை ஒரமாக நிறுத்தப்பட்டது.
நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் சாலையில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், வேகமாக வந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்புக்கம் படுத்திருந்த தொழிலாளர்கள் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் கீழ் சிக்கிய சடலங்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.