முகப்பு
இந்தியா

கரோனா பாதிப்பு: கேரளத்திற்கு நாளை(ஜூலை 30) செல்கிறது மத்திய உயர்நிலைக் குழு

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள செல்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
கேரளத்திற்கு நாளை(ஜூலை 30) செல்கிறது மத்திய உயர்நிலைக் குழு
பகிர்:

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை செல்கிறது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாட்டில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் கேரளத்திலிருந்து பதிவாகிறது.

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

“கேரளத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு கேரளத்திற்கு அனுப்படவுள்ளது.

தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழு ஜூலை 30ஆம் தேதி கேரளத்திற்கு செல்லவுள்ளது. மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநில களநிலவரத்தை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியக் குழு மேற்கொள்ளவுள்ளனர்.

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1.54 லட்சமாக உள்ளது. மேலும், 6 மாவட்டங்களின் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.”

முழு கட்டுரையைப் படிக்க →