இந்தியா

‘அவையின் பொறுமையை சோதிக்காதீர்’: வெங்கையா நாயுடு எச்சரிக்கை

DIN

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் 9வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.

மேலும், அவையில் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது, சத்தம் போடுவது போன்ற புகார்கள் வந்துள்ளது. இவை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவைத் தலைவர், பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT