முகப்பு
இந்தியா

தில்லியில் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அரவிந்த் கேஜரிவால்

​தில்லியில் இதுவரை மொத்தம் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் இதுவரை மொத்தம் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி கேஜரிவால் கூறியது:

"தில்லியில் இதுவரை 1 கோடிக்கும் சற்று கூடுதலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனை இன்று (சனிக்கிழமை) எட்டப்பட்டது. 74 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 26 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தில்லியிலுள்ள 2 கோடி மக்கள்தொகையில் 1.5 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குத் தகுதியானவர்கள். எனவே, 1.5 கோடி பேரில் 74 லட்சம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர். இது தில்லி மக்கள்தொகையில் 50 சதவிகிதம்."

இதனிடையே, தில்லியில் புதிதாக 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 56 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.