கோப்புப்படம் 
இந்தியா

எல்லைப்பகுதியில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம், நாகாலாந்து முடிவு

எல்லைப் பிரச்னை நிலவும் பதற்றமான பகுதிகளில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

DIN

எல்லைப் பிரச்னை நிலவும் பதற்றமான பகுதிகளில் இருந்து காவலர்களைத் திரும்பப் பெற அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

கடந்த 27ஆம் தேதி அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் காவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். இருமாநில காவலர்கள் மோதிக் கொண்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் தங்களது மாநில எல்லைகளில் உள்ள காவலர்களைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் திமாபூரில் நடைபெற்ற இருமாநில தலைமை செயலர்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இரு மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னைகள் நிலவி வரும் நிலையில் இது சம்பந்தமாக, இரு மாநிலங்களின் காவலர்களை தங்களின் தற்போதைய எல்லைப்பகுதிகளில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு மாநில அரசுகளின் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் எல்லைப்பகுதிகளில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய அசாம் அரசு எப்போதும் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் அரசு நாகாலாந்து மாநில அரசுடன் 512 கிமீ தூரம் எல்லையைப் பகிர்ந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

SCROLL FOR NEXT