இந்தியா

ஐசிஐசிஐ வங்கியின் போலி இணையதளம்: எச்சரிக்கும் தில்லி காவல்துறை

DIN

ஐசிஐசிஐ வங்கியின் போலி இணையதளம் குறித்து தில்லி காவல்துறை சார்பில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை தகவலில், குறுஞ்செய்தி மூலமாக, ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பப்படுகிறது. அதில் உங்களது கேஒய்சி தகவல்களை சரிபார்க்கவும் என்று ஐசிஐசிஐ வங்கியின் போலியான இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனை வங்கி வாடிக்கையாளர்கள் கிளிக் செய்து தகவல்களை பதிவிட்டால், உங்களது பயனாளர் முகவரி மற்றும் கடவுச் சொல் ஆகியவை திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் யாரும், இணையதள வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் போது, தனியாக வங்கியின் இணையதள முகவரியைப் பதிவிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்று குறுந்தகவல்களில் வரும் முகவரிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT