நாட்டில் 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி கரோனா 
இந்தியா

நாட்டில் 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. புதிதாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,795-ஆக அதிகரித்துள்ளது.

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

நாட்டில் 54 நாள்களுக்குப் பிறகு 1.27 லட்சமாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிதாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,795-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 1) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 1,27,510 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,81,75,044-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18,95,520 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 2,795 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,31,895-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 2,55,287 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை  2,59,47,629 -ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT