முகப்பு
இந்தியா

ஹரியாணாவின் மொத்த கரோனா பலியில் பாதி மே மாதத்தில் நிகழ்ந்தவை

ஹரியாணாவின் மொத்த கரோனா பலி எண்ணிக்கையில் சுமார் பாதியளவுக்கு கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

Updated On : 1 ஜூன், 2021 at 5:04 PM
ஹரியாணாவின் மொத்த கரோனா பலியில் பாதி மே மாதத்தில் நிகழ்ந்தவை
பகிர்:


சண்டிகர்: ஹரியாணாவின் மொத்த கரோனா பலி எண்ணிக்கையில் சுமார் பாதியளவுக்கு கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஹரியாணாவில் கரோனா தொற்றுக்கு 4,216 பேர் உயிரிழந்த நிலையில், இது மே 31ஆம் தேதி நிலவரப்படி 8,303 ஆக உயர்ந்துள்ளது.

இதேக் காலக்கட்டத்தில், ஹரியாணாவில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,87,978-லிருந்து 7,56,635 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

ஹரியாணாவிலேயே குருகிராம், ஃபரிதாபாத், ஹிசர் ஆகிய மாவட்டங்கள் கரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.