முகப்பு
இந்தியா

ஊரடங்கால் மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை 17% சரிவு

கரோனா இரண்டாம் அலை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதத்தில் நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Updated On : 1 ஜூன், 2021 at 3:36 PM
ஊரடங்கால் மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை 17% சரிவு
பகிர்:


புது தில்லி: கரோனா இரண்டாம் அலை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதத்தில் நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்கப் பயன்படும் பெட்ரோல் விற்பனை 17 லட்சம் டன் ஆகக்  குறைந்துள்ளது. இது எண்ணெய் நிறுவனங்கள் அளித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

இது கடந்த 2020 மே மாதத்தைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகம் என்றாலும், கரோனா காலத்துக்கு முந்தைய தேவையைக் காட்டிலும் 28 சதவீதம் குறைவாகும்.
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கரோனா பேரலை தீவிரமாக இருந்த போதிலும், அந்தந்த மாநில அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 
கடந்த மே மாதத்தில் டீசல் விற்பனையும் 48 லட்சம் டன்களாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2019 மே மாதத்தைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவாகும்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.