முகப்பு
இந்தியா

'கரோனா இல்லாத கிராமமாக மாற்றுங்கள்; ரூ.50 லட்சம் பரிசை வெல்லுங்கள்'

உங்கள் கிராமத்தை கரோனா இல்லாத கிராமமாக மாற்றிக் காட்டினால், ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
'கரோனா இல்லாத கிராமமாக மாற்றுங்கள்; ரூ.50 லட்சம் பரிசை வெல்லுங்கள்'
பகிர்:


மும்பை: உங்கள் கிராமத்தை கரோனா இல்லாத கிராமமாக மாற்றிக் காட்டினால், ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்றை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரோனாவை ஒழிக்கும் வகையில், கரோனா இல்லாத கிராமம் என்ற போட்டியை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதாக ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஹசன் முஷ்ரிப் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் முதல் பரிசாக ரூ.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.25 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டித்தில் மொத்தம் 6 வருவாய் மண்டலங்கள் உள்ளன. அப்படியானால் 18 பரிசுகள் வழங்கப்படும். அதற்கு ரூ.5.4 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →