முகப்பு
இந்தியா

தெலங்கானா மாநில தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தெலங்கானா மாநில தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பகிர்:

தெலங்கானா மாநில தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தெலங்கானா மாநிலம் உருவான தினத்தில் அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனித்துவமான கலாசாரம் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கிய  கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம். தெலங்கானா மக்களின் நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவானது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →