முகப்பு
இந்தியா

நாட்டில் தொடா்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,11,499 பேர் குணமடைந்தனர்

நாட்டில் தொடா்ந்து 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18  லட்சத்துக்கு கீழ் உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

நாட்டில் தொடா்ந்து 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18  லட்சத்துக்கு கீழ் உள்ளது. அதன்படி, 17,13,413 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தொடா்ந்து கரோனா தொற்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,154 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஒரே நாளில் 2,887 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,37,989-ஆக அதிகரித்துள்ளது.

தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,11,499 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,63,90,584 -ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை அளவிலான 24 மணி நேரத்தில் 21,59,873 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 35,37,82,648  கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22,10,43,693 பேருக்கு போடப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →