கரோனாவுக்கு பலியானோரின் அஸ்தி காவிரியில் கரைப்பு: கர்நாடக அரசு நடவடிக்கை
கரோனாவால் பலியானவர்களின் அஸ்தியை காவிரியில் கரைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு: கரோனாவால் பலியானவர்களின் அஸ்தியை காவிரியில் கரைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கரோனாவால் பலியாகி, இறுதிச் சடங்கு செய்யப்பட்ட 500 பேரின் அஸ்தி நிரம்பிய கலசங்கள் அனைத்தும் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியில் இந்து முறைப்படி புதன்கிழமை கரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், இவ்வளவு அதிகமானோரின் அஸ்தி ஆற்றில் கரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கரோனா பெருந்தொற்று கடந்த மாதம் தீவிரமடைந்திருந்த நிலையில், பல திறந்தவெளிப் பகுதிகளில் கரோனாவால் பலியானோரின் உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கிருந்து சேமிக்கப்பட்ட அஸ்தியை அவர்களது உறவினர்கள் யாரும் பெற்றுக் கொள்ள முன்வராததால், கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.