முகப்பு
இந்தியா

பெருந்தொற்றுக் காலம்: தனது ரூ.15 கோடி ஊதியத்தை விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி

கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

Updated On : 3 ஜூன், 2021 at 3:31 PM
பொதுமுடக்க எதிரொலி: தனது ரூ.15 கோடி ஊதியத்தை விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி
பகிர்:


புது தில்லி: கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிதியாண்டில், கரோனா பெருந்தொற்றால் தனது நிறுவனத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாமாக முன் வந்து தனது வருவாயை விட்டுக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020- 21-ஆம் ஆண்டு நிதியறிக்கையில், அம்பானியின் ஊதியம் - எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளையில், கடந்த நிதியாண்டில் அவருக்கு ஊதியம் என்று ரூ.15 கோடி கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதையே அவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.