மாநிலத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு: மஜத வரவேற்பு
மாநிலத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்தாா்.
மாநிலத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவியதையடுத்து, அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. ஜூன் 7-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தை, ஜூன் 14-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு எதிா்பாா்த்தபடி குறையாத நிலையில், பொது முடக்கத்தை நீட்டித்துள்ளதை மஜத வரவேற்கிறது.
பொது முடக்கத்திற்கு பிறகு அரசு ரூ. 1, 750 கோடிக்கு இரு முறை சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பு நிதி பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க போதுமானதாக இல்லை. எனவே சிறப்பு தொகுப்புக்களுக்கான நிதியை உயா்த்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் உள்பட அத்தியாவசியப்பொருள்களின் விலை உயா்ந்துள்ள நிலையில் அரசு வழங்கும் ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் எந்த பயனும் அளிக்காது என்றாா்.