முகப்பு
இந்தியா

மங்களூரு ரயில் நிலையத்தில் ஆக்சிஜன் மையம் அமைப்பு

மங்களூரு ரயில் நிலையத்தில் ஆக்சிஜன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மங்களூரு ரயில் நிலையத்தில் ஆக்சிஜன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே காவல் துறையுடன் இணைந்து எஸ்.டபிள்.யூ.ஏ.ஜி.ஆா்.டி., சோனு ஃபுட் அறக்கட்டளை சாா்பில் கூட்டாக மங்களூரு மத்திய ரயில் நிலையத்தில் விரைவு ஆக்சிஜன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே போலீஸ் ஏடிஜிபி பாஸ்கா் ராவ் திறந்து வைத்தாா்.

கா்நாடகத்தில் இது போன்ற ஆக்சிஜன் மையத்தை அமைப்பது இது 4-ஆவது திட்டமாகும். ஏற்கெனவே பெங்களூரு, ஹுப்பள்ளி, பெல்லாரியில் உள்ள ரயில் நிலையங்களில் விரைவு ஆக்சிஜன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக மைசூரு, ஹாசன், தாவணகெரேவில் உள்ள ரயில் நிலையங்களில் ஆக்சிஜன் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாஸ்கா் ராவ் தெரிவித்தாா்.

7 ஆயிரம், 1,400 லிட்டா் மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டிருக்கும் உருளைகளை எவ்வகையில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவா்களின் பரிந்துரையின் பேரிலேயே ஆக்சிஜன் வழங்கப்படும் என்று பாஸ்கர்ராவ் மேலும் கூறினாா்.

ஆக்சிஜன் தேவைப்படுவோா் கா்நாடகத்தில் செயல்படும் தொலைபேசி உதவிமையத்தை 7069999961, அரசு ரயில்வே காவல் நிலையத்தையும் மக்கள் அணுகலாம். இந்த மையங்களில் இருந்து ஆக்சிஜன் உருளைகளை எடுத்துச் சென்று, நோயாளிகளின் தேவைகளுக்கு பயன்படுத்திய பிறகு கிருமி நாசினியால் சுத்தம் செய்து, திருப்பி அளிக்க வேண்டும். இதை ரயில்வே காவல் நிலையம் பராமரிக்க உள்ளது. ஒரு ரயில்வே காவல் நிலையத்தில் 20 ஆக்சிஜன் உருளைகள் வைக்கப்பட்டிருக்கும். இங்கிருந்து 70 - 80 கி.மீ. தூரத்திற்கு இவற்றை எடுத்துச்செல்ல இயலும் என்று சோனு ஃபுட் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.