விதி மீறல்: 714 வாகனங்கள் பறிமுதல்
பொது முடக்கத்தின் போது பெங்களூரில் விதிமீறிய 714 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
பொது முடக்கத்தின் போது பெங்களூரில் விதிமீறிய 714 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 714 வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 628 இரு சக்கர வாகனங்கள், 39 மூன்று சக்கர வாகனங்கள், 47 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும் என்று பெங்களூரு மாநகர காவல் தெரிவித்துள்ளது.