முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 17,328 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 17,328 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 17,328 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்:

"மாநிலத்தில் புதிதாக 17,328 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,16,354 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.89 சதவிகிதம். 

கடந்த நாள்களில் 209 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 9,719 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 112 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 16,140 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,007 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

24,003 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,40,642 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் இன்னும் 1,67,638 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.