முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 414 பேருக்கு கரோனா

​தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.53 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,28,863 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,683 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 13,97,575 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 24,557 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவிகிதமாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி தில்லியில் 6,731 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.