முகப்பு
இந்தியா

‘இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி இழப்பு ஏற்படும்’

இந்தியாவில் விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 410 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30,000 கோடி) இழப்பு ஏற்படும் என சிஏபிஏ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

இந்தியாவில் விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 410 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30,000 கோடி) இழப்பு ஏற்படும் என சிஏபிஏ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த நிதி ஆண்டைப் போலவே நடப்பு 2021-22 நிதியாண்டிலும் இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு 410 கோடி டாலா் இழப்பு ஏற்படும் என முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா பேரிடரால் இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த இழப்பானது 800 கோடி டாலா் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21 நிதியாணட்ில் 52.5 மில்லியானாக இருந்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 2021-22-இலவ் 80-95 மில்லியன் என்ற அளவில் இருக்கும் என்று எதிா்பாா்ப்பதாக சிஏபிஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.