முகப்பு
இந்தியா

காய்கறி சந்தைகளுக்கு அனுமதி; 50% பயணிகளுடன் மெட்ரோ சேவை: கேஜரிவால் 

புது தில்லியில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் பொதுமுடக்கம் சில தளர்வுகளடன் நீட்டிக்கப்படுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:48 PM
காய்கறி சந்தைகளுக்கு அனுமதி; 50% பயணிகளுடன் மெட்ரோ சேவை: கேஜரிவால் 
பகிர்:

புது தில்லியில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் பொதுமுடக்கம் சில தளர்வுகளடன் நீட்டிக்கப்படுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் உள்ள காய்கறி சந்தைகளில் கடைகள் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் திறந்திருக்கும் முறையைப் பின்பற்றலாம் என்றும், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பொழுதுபோக்கு நிறுவனங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செய்யப்படவும், அரசு அலுவலகங்களில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் 100 சதவீதத்துடனும், குரூப் பி ஊழியர்கள் 50 சதவீதம் பேருடனும் இயங்க முதல்வர் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.

தில்லி மெட்ரோ ரயில் சேவை 50 சதவீத ஊழியர்களுடன் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.