இந்தியா

புல்வாமாவில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையின் கூட்டுப் படையினர், இன்று காலை வழக்கமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, புல்வாமா மாவட்டம் திரால் அருகே சைமு என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அகற்றினர். 

கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கண்ணிவெடியை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இதே திரால் பகுதியில் கடந்த ஞாயிறன்று மத்தியப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT