முகப்பு
இந்தியா

ரயில் முன் குதித்த முதியவர்: ரயிலை நிறுத்தி உயிரைக் காத்த ஓட்டுநர்

தாணே மாவட்டம் வித்தல்வாடி ரயில் நிலையத்துக்கு அருகே, ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 79 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் மத்திய ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர். 

Updated On : 7 ஜூன், 2021 at 4:42 PM
ரயில் முன் குதித்த முதியவர்: ரயிலை நிறுத்தி உயிரைக் காத்த ஓட்டுநர்
பகிர்:


தாணே: தாணே மாவட்டம் வித்தல்வாடி ரயில் நிலையத்துக்கு அருகே, ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 79 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் மத்திய ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர். 

தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் குதித்தைப் பார்த்த ஓட்டுநர், அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் பகுதியைச் சேர்ந்த முதியவர், ரயில் நிலையத்துக்கு வந்து, ரயில் வந்து கொண்டிருந்த போது அந்த தண்டவாளத்தில் குதித்துள்ளார். ஆனால் புத்திசாலித்தனமாக, ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்தி தற்கொலையை தடுத்துள்ளார்.

Advertisement

உடனடியாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த முதியவர் மகனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.