இந்தியா

நாட்டில் இதுவரை 23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

நாட்டில் கரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில், இதுவரை23.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்று மாநில சுகாதாரத் துறை சார்பில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 33,64,476 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 23,61,98,726-ஆக அதிகரித்துள்ளது.

இதில் 18.93 கோடி (18,93,54,930) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4.65 கோடி (4,65,84,235) பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT