முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
மகாராஷ்டிரத்தில் கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
பகிர்:

மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மும்பை உள்பட கடலோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →