இந்தியா

வருமான வரி புதிய வலைதள பிரச்னைக்கு விரைவில் தீா்வு: இன்ஃபோசிஸ்

DIN

புது தில்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய வலைதளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரி செய்யப்படும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் புதன்கிழமை கூறியுள்ளது.

முன்னதாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இது தொடா்பாக அந்த நிறுவனத்திடம் வலியுறுத்தியிருந்தாா். இன்ஃபோசிஸ் நிறுவனம்தான் அந்த வலைதளத்தை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக புதிய வலைதளத்தை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த வலைதளத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டில் பெற்றது. அந்நிறுவனம் உருவாக்கிய வலைதளம் கடந்த திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

வழக்கமாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தால், அதைப் பரிசீலனை செய்து தொகையை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 63 நாள்கள் ஆகும். அந்தக் காலத்தை ஒரு நாளாகக் குறைக்கும் வகையில் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய வலைதளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டியிருந்தனா்.

இந்நிலையில் இது தொடா்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வருமான வரி வலைதளத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் பணியில் எங்கள் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். ஒருவாரத்தில் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்று கூறியுள்ளது.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான வலைதளத்தையும் இன்ஃபோசிஸ் நிறுவனமே உருவாக்கியுள்ளது. அது செயல்படும் வேகம் குறைவாக இருப்பதாக பலா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT