முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 11,042 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 11,042- ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 11,042- ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 11,042 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,191போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு- 1,011, ஹாசன்- 776, தென்கன்னடம்- 580, தும்கூரு- 571, சிவமொக்கா- 521, மண்டியா- 448, பெலகாவி- 439, வடகன்னடம்- 426, சிக்கமகளூரு- 397, சித்ரதுா்கா- 349, தாவணகெரே- 313, பெல்லாரி- 293, உடுப்பி- 291, சிக்கபளாப்பூா்- 280, குடகு- 279, சாமராஜ்நகா்- 274, பெங்களூரு ஊரகம்- 264, தாா்வாட்-261,கோலாா்- 247, விஜயபுரா- 174, கொப்பள்- 161, ராய்ச்சூரு-115, கதக்- 90, பாகல்கோட்- 72,ஹாவேரி- 67, ராமநகரம்- 59, கலபுா்கி- 58, பீதா்- 20, யாதகிரி-15 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,39,290 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15,721 போ் வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 24,96,132போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,10,652 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 194 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 47 போ் இறந்துள்ளனா்.

மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு- 18, பெலகாவி-12, ஹாசன்- 10, பெங்களூரு ஊரகம், தென்கன்னடம், தாா்வாட், சிவமொக்கா- 8, தாவணகெரே, கோலாா்- தலா 7, சிக்கபளாப்பூா், ஹாவேரி, கலபுா்கி- தலா 6, பெல்லாரி, தும்கூரு- 5, மண்டியா-4. பாகல்கோட், சிக்கமகளூரு, சித்ரதுா்கா, கதக், ராய்ச்சூரு, விஜயபுரா-தலா 3, குடகு, கொப்பள், உடுப்பி, வடகன்னடம் - 2, பீதா், சாமராஜ்நகா், ராமநகரம்- 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். இதுவரை மொத்தம் 32,485 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.