முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 11042 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,042 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
கர்நாடகத்தில் மேலும் 11042 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,042 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 11,042 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,39,290 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 15,721 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 24,96,132 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 32,485 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 2,10,652 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.