இந்தியா

நம்பிக்கையூட்டும் தகவல்: கரோனாவை வென்ற 104 வயது மூதாட்டி

PTI


கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கரோனாவிலிருந்து 11 நாள்களில் மீண்டுள்ளார்.

கரோனா பாதித்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாளின் உடல்நிலை, மே 31-ஆம் தேதி மோசமடைந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, 11 நாள்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 

அவருடன் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT