இந்தியா

தில்லியில் தொடர்ந்து குறையும் பாதிப்பு: மேலும் 238 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் ஒரேநாளில் புதிதாக 238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 77,112 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், மேலும் 238 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,30,671ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 24 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 24,772ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,922 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 504 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,01,977ஆக உயர்ந்துள்ளது. 1,238 நோயாளிகள் வீட்டில் தனிமையில் உள்ளனா். மருத்துவமனைகளில் மொத்தம் 21,897 படுக்கைகள் காலியாகவுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கடந்த சில நாள்களாக தில்லியில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT