முகப்பு
இந்தியா

சாலை விபத்துகள் அமைதியான பெருந்தொற்று போன்றது: ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 11 சதவீதம் இந்தியாவில் நடப்பவை என்று தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஜூன், 2021 at 3:13 PM
சாலை விபத்துகள் அமைதியான பெருந்தொற்று போன்றது: ராஜ்நாத் சிங்
பகிர்:


புது தில்லி: நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 11 சதவீதம் இந்தியாவில் நடப்பவை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள், ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நாட்டில் நிகழும் சாலை விபத்துகள் தற்போது கவலைதரும் வகையில் உள்ளன.

Advertisement

உலகில் உள்ள மொத்த வாகனங்களில் வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்களே இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், உலகளவில் நடைபெறும் மொத்த சாலை விபத்துகளில் இந்தியாவில்தான் 11 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. 1.5 லட்சம்  பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். இது ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.