இந்தியா

திமுக எம்.பி.க்கள் தில்லிக்கு வர உத்தரவு

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதை அடுத்து திமுக எம்.பி.க்கள் அனைவரும் தில்லிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்லவிருக்கிறார். 

தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் பேசும் முதல்வர் அதற்கான மனுக்களையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறுநாள் 18-ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கிறார். 

இதையடுத்து, திமுக எம்.பி.க்கள் அனைவரும் தில்லிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வாய்மொழி உத்தரவாக இதனை பிறப்பித்துள்ளார். 

முதல்வர் தில்லி வரும் நேரத்தில் கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் தில்லியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT