இந்தியா

2021ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து

DIN

கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரேபியா தடை விதித்திருந்த நிலையில் நடப்பாண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

கரோனா பரவல் அபாயம் கருதி, வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் நாட்டுக்கு இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு சவூதி அரேபியா தடை விதித்திருந்தது.

கரோனா அபாயம் கருதி, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60,000 போ் மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது சவூதி அரேபியாவில் இருப்பவா்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்வது ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT