முகப்பு
இந்தியா

அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்: ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து அங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மருத்துவ சேவைகள், அத்தியாவசிய சேவைகளுக்குத் தடையில்லை. மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →